சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான  மற்றும் பாலியம் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.  இந்த நிலையில் சென்னை அருகே உள்ள வண்டலூர் தனியார் குழந்தைகள் காப்பத்தில் 18 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு உள்ளது தெரிய வந்ததுள்ளது.

புகாரின் பேரில்,  வண்டலூர் தனியார்  குழந்தைகள் காப்பகத்தை நடத்தி வந்த, காப்பக உரிமையாளர் அருள்தாஸ், அவரது மகள் ப்ரியா, கார் ஓட்டுநர் பழனி ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே  அண்மையில் தாம்பரத்தில் அரசு பெண்கள் விடுதியில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளிக்கப்பட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டு இருப்பது, குற்றவாளிகளுக்கு சட்டத்தின்மீதான நம்பிக்கையின்மை என்பதேயே வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே தனியார் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தின் உரிமையாளர்களாக அருள்தாஸ் மற்றும் அவரது மனைவி பிரியா ஆகியோர் விடுதியை நிர்வகித்து வந்துள்ளனர். இந்த விடுதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட சிறுமிகள் மற்றும் குழந்தைகள் தங்கி படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், குழந்தைகள் காப்பகத்திற்கு குழந்தை நல அலுவலர்கள் திடீரென்று ஆய்விற்கு சென்று உள்ளனர். அப்போது அந்த காப்பகத்தில் உள்ள சிறுமிகளுக்கு தொடர்சியாக பழனி என்பவர் பாலியல் தொல்லை அளிப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

இதுகுறித்து விடுதியின் உரிமையாளர் அருள்தாஸ் அவர்களிடம் கூறிய போது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அதிகாரிகளிடம் தெரிவித்துள்ள னர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் பாதிக்கப்பட்ட சிறுமிகள் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் குழந்தைகள் நல அலுவலர்கள் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர்.காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பழனி என்பவர் காப்பக உரிமையாளர் அருள்தாஸ் அவர்களின் கார் ஓட்டுநர் என்பது தெரியவந்தது.இதனையடுத்து கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உரிமையாளர் அருள்தாஸ் மற்றும் அவரது மனைவி பிரியா மற்றும் கார் ஓட்டுநர் பழனிஆகியோரை கைது செய்தனர்.

இந்த நிலையில் காவல் துறையினரால் கைது செய்யப்பட அருள்ராஜூக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து சிகிசைக்காக அவர் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் மீதமுள்ள இரண்டு பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து காப்பகத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் குழந்தை நல அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

மேலும் அவர்களுக்கு எந்த மாதிரியான பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வண்டலூரில் குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு தொடர்ந்து பாலியல், தொல்லை அளித்ததாக அளித்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.மேலும் இந்த சம்பவம் குறித்து தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேள்விகுறியாகி உள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. மேலும் குழந்தைகள் காப்பகத்தில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் 8வயது சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் பலாத்காரம்! ஆயுதப்படை உதவி காவல் ஆய்வாளர் போக்சோ சட்டத்தில் கைது…

அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு- பெண் காவல்ஆய்வாளர் கைது!

தமிழகத்தில் அதிகரித்துள்ள போதை கலாச்சாரத்தால் பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு! பிரேமலதா குற்றச்சாட்டு

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட உடன்குடி ‘சல்மா பள்ளி’ நிர்வாகிகளுக்கு உடனடி ஜாமின்! தூத்துக்குடி நீதிமன்றம் தாராளம்….