டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,145 பேருக்கு கொரோனா, 8,706 பேர் டிஸ்சார்ஜ்: 289 பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையில்,  நாடு முழுவதும் இதுவரை ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.

கோவிட் -19 நோய்த்தொற்றின் ஓமிக்ரான் மாறுபாட்டின் 101 வழக்குகள் இதுவரை 11 மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு விளக்கமளித்த சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால், “உலகில் 91 நாடுகளில் ஓமிக்ரான் மாறுபாடு பதிவாகியுள்ளது என்றும், இந்தியாவில் பரவி வருகிறது என்றும் கூறியுள்ளார்.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8மணி வரையலான கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,145 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,46,40,400 ஆக உயர்ந்தது.

நேற்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி மேலும் 289 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,77,158 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.37% ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 8,706 பேர் குணமடைந்த நிலையில்,  குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,41,71,471ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.38% ஆக உயர்ந்துள்ளது

நாடு முழுவதும்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 84,565 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.24% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் 1,36,66,05,173 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 62,06,244 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 66,28,97,388*  மாதிரிகள் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் 12,45,402 மாதிரிகள் சோதிக்கப்பட்டு உள்ளது என ஐசிஎம்ஆர். தெரிவித்து உள்ளது.