டெல்லி: இந்தியா முழுவதும் கடந்த24மணி நேரத்தில் 16,935 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதுடன், 51 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து அறிக்கை  வெளியிட்டுள்ளது. அதில்,

கடந்த 24மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக பேர் 16,935 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,37,67,534 ஆக உயர்ந்தது. தினசரி பாதிப்பு விகிதம் 6.48% ஆக உள்ளது.

நேற்று மேலும் 51 பேர்  சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,25,760 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆக உள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் தொற்றில் 16,069 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 4,30,97,510 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.47% ஆக உள்ளது.

தற்போதைய நிலையில் நாடு முழுவதும் 1,44,264 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.33% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை  2,00,04,61,095 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 4,46,671 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]