சென்னை: மாநிலத்தின் தலைநகர் சென்னையில் உள்ள  கோவில் ஒன்றின் வாசலில் 15 வயது சிறுமியை 17 வயது சிறுவன் ஒருவன் தாலி கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால், குழந்தை திருமணம் 40 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தமிழகஅரசு எடுத்த கணக்கெடுப்பில் தெரிய வந்தது. இதை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள ல்லையம்மன்  கோயில் வாசலில் 17 வயது சிறுவன்  ஒருவன் 15 வயது சிறுமியில் கழுத்தில் தாலி கட்டும் வீடியோ சமூக தளங்களில் வைரலாகியுள்ளது. இருவர்களும் காதலித்து வந்த நிலையில், கடந்த 7ந்தேதி அந்த சிறுமிக்கு  அவரது காதலனான 17வயது சிறுவன்  தாலி கட்டியுள்ளான். இந்த திருமணம் இருவரின் பெற்றோருக்கு தெரியாமல், நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.

தற்போது, அவர்களின் திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  இதுகுறித்து காவல்துறை விசாரணையில் இறங்கியுள்ளது

தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் 40 சதவிகிதம் அதிகரிப்பு… அதிர்ச்சி தகவல்.