சென்னை

மிழகத்தில் 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அந்த அறிக்கையில் அவர்,

தமிழக கடற்கரை மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும்‌ வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக

22.08.2021:

திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம்‌, விருதுநகர்‌, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, மயிலாடுதுறை,
நாகப்பட்டினம்‌,  கடலூர்‌, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, சேலம்‌, திருவண்ணாமலை, காஞ்சிபுரம்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய கன மழை பெய்யக்கூடும். புதுச்சேரி மற்றும்‌ சென்னையில் ‌ அநேக இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை‌ பெய்யக்கூடும்‌.

23.08.2021:

டெல்டா மாவட்டங்கள்‌, கடலூர்‌, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌, திருவள்ளூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ அனேக இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்குப் பிற்பகலில்‌ வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும். நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்‌.

அடுத்த 48 மணி நேரத்திற்குப் பிற்பகலில்‌ வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌, நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌.

தென்‌ மேற்கு மற்றும்‌ மத்திய மேற்கு அரபிக் கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌” 

எனத் தெரிவித்துள்ளார்.