17/06/20201: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

Must read

சென்னை: தமிழகத்தில்  நேற்று 10,448 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் சென்னையில்,  நேற்று 689 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,27,283 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. நேற்று 10,448 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆனது.  இதையடுத்து பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 23,88,746 ஆக உயர்நதுள்ளது. நேற்று ஒரே நாளில் 270 பேர் மரணம் அடைந்தையடுத்து,  இதுவரை 30,338 பேர் உயிர் இழந்துள்ளனர்.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 21,058  பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 22,44,073  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது தமிழகம் முழுவதும்  1,14,335  பேர் சிகிச்சையில் உள்ளனர்.  சென்னையில் 6,531 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் நேற்று புதியதாக நேற்று 689 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதுவரை 5,27,283 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுமட்டும்  42 பேர் உயிர் இழந்துள்ளார்.. இதுவரை 7,920 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதே  வேளையில் நேற்று ஒரே நாளில்  1,558 பேர் குணம் அடைந்து  வீடு திரும்பி உள்ளனர். இதுவரை சென்னையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை  5,12,832 ஆக அதிகரித்து உள்ளது.

16.06.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 22,52,361 பேருக்கும், 16.06.2021 அன்று 27,004 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

More articles

Latest article