சென்னை

மிழக விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடனாக ரூ. 1660 கோடி வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.

தமிழக விவசாயிகளுக்கு ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கக் கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லாக் கடன் வழங்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். நடப்பாண்டாஅ 2023-24 ஒ; இந்த வட்டியில்லாக் கடன், ரூ.1,500 கோடி வரை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களில் ஈடுபடும் விவசாயிகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலமாகப் பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.. வேளாண் கடன் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளும் கூட்டுறவு வங்கிகளை அணுகி பயன் பெறலாம் என்றும் அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் கிராமங்கள் தோறும் இருக்கும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாகவும், ஆடு, மாடு, கோழி, மீன்கள் போன்றவற்றை வளர்க்க, தங்களுடைய ஆதார் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களைச் சமர்ப்பித்து கடன் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.