சென்னை: தீபாவளி பண்டிகை தினத்தை முன்னிட்டு சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.  அதே போல்  தீபாவளி முடிந்து  சென்னை திரும்ப இன்று  சென்னைக்கு  1578 சிறப்பு பேருந்துகளும் சென்னையை தவிர்த்து பிற இடங்களுக்கு திரும்ப 2050  சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர சிறப்பு பேருந்துகளை அரசு போக்குவரத்துககழகம் இயக்கி வருகிறது. அதன்படி, தீபாவளி நேற்று முடிவடைந்த நிலையில், இன்று பொதுமக்கள் சென்னை உள்பட அவர்களின் பணியிடங்களக்க திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  நேற்று (24ஆம் தேதி)  திங்கட்கிழமை அன்று வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்ப 530 சிறப்பு பேருந்துகளும், சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு திரும்ப 580 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

இன்று 25ஆம் தேதி  செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்ப 1578 சிறப்பு பேருந்துகளும் சென்னையை தவிர்த்து பிற இடங்களுக்கு திரும்ப 2050 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட இருக்கின்றன.  

நாளை 26 ஆம் தேதி அன்று புதன்கிழமை வழக்கம்போல் இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்குத் திரும்ப 854 சிறப்பு பேருந்துகளும் சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு திரும்ப 1130 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட இருக்கின்றன.

இந்த மூன்று நாட்களும் வழக்கம் போல் இயக்கப்படும் 6300 பேருந்துகள் 6852 சிறப்பு பேருந்துகள் என்று மொத்தம் 13 ஆயிரத்து 1052 பேருந்துகள் இயக்கப்படுகின்றன