சென்னை: தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அரசு சார்பில் ஆஜராக வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி தற்போது  சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜராக 155 அரசு வழக்கறிஞர்களை தமிழகஅரசு நியமித்து உத்தரவிட்டு உள்ளது.

அதில்,  சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 24 சிறப்பு அரசு பிளீடர்களும், 36 கூடுதல் அரசு பிளீடர்களும், சிவில் வழக்குகளில் ஆஜராவதற்காக 48 அரசு வழக்கறிஞர்களும், குற்றவியல் வழக்குகளில் ஆஜராவதற்காக 15 அரசு வழக்கறிஞர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராக,  8 சிறப்பு அரசு பிளீடர்களும், 15 கூடுதல் அரசு பிளீடர்களும், சிவில் வழக்குகளில் ஆஜராவதற்காக 18 அரசு வழக்கறிஞர்களும், குற்றவியல் வழக்குகளில் ஆஜராவதற்காக 10 அரசு வழக்கறிஞர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசின் சார்பில் வரிகள் (Taxes) தொடர்பான வழக்கில் ஆஜராவதற்காக வி.பிரசாந்த் கிரண் நியமிக்கப்பட்டுள்ளார்.