க்ரா

க்ரா மாவட்ட நிர்வாகம் தாஜ்மகாலைக் காண நாள் ஒன்றுக்கு 15000 பேருக்கு அனுமதி அளித்துள்ளது.

கடந்த மார்ச் மாத இறுதி முதல் கொரோனா பரவுதலைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  இதையொட்டி தாஜ்மகால் உள்ளிட்ட பல இடங்கள் மூடப்பட்டன.  சுமார் 190 நாட்களுக்கு மேல் மூடப்பட்டிருந்த தாஜ்மகால், ஆக்ரா கோட்டை உள்ளிட்டவை கடந்த நவம்பர் மாதம் முதல் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன.

கட்டுப்பாடுகளுக்கு இணங்க நாள் ஒன்றுக்குத் தாஜ்மகாலைக் காண 5000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்தது  இதனால் பலரும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தும் அனுமதி கிடைக்காத நிலை ஏற்பட்டது.  நாளுக்கு நாள் முன்பதிவு எண்ணிக்கை அதிகரித்ததால் காத்திருப்போர் எண்ணிக்கை மிகவும் அதிகரித்தது.

இதையொட்டி ஆக்ரா மாவட்ட நிர்வாகம் தற்போது தாஜ்மகாலைக் காண தினம் 15000 பேருக்கு அனுமதி அளித்து வருகிறது.  இதைப் போல் ஆக்ரா கோட்டையைக் காண 7500 பேருக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.  பலரும் முன்பதிவு செய்து காத்திருப்பதைக் குறைக இந்த நடவடிக்கை எடுக்க்பட்டுள்ளதாக ஆக்ரா மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.