சென்னை

சென்னையில் அமைந்துள்ள நீலாங்கரை பகுதியில் ஒரே நாளில் 15 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. 

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக்ஜம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது.  இந்த மழை நீரினால் ஆங்காங்கே குப்பை சேர்ந்துள்ளதால் மாநகராட்சி ஊழியர்கள் அவற்றை அகற்றி வருகின்றனர்/

அவ்வகையில் சென்னை நீலாங்கரை பகுதியில் அதிக அளவில் குப்பைகள் சேர்ந்திருப்பதாகப் புகார்கள் எழுந்தன. எனவே சரஸ்வதி நகர், பாண்டியன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இங்கு ஒரே நாளில் சுமார் 15 டன் குப்பைகள் அகற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறகு அப்பகுதியில் நோய் பரவலைத் தடுக்கும் விதமாக மருந்து தெளிக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் மாநகராட்சியின் நடவடிக்கைக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.