சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை நடைபெறும் 3வது தடுப்பூசி மெகா முகாம்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையிலுள்ள டி.எம்.எஸ் வளாகத்தில்,  முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் ஒருங்கிணைந்த பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம், 108 அவசரகால ஊர்தி மேலாண்மை சேவை ஆண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர்,   108 அவசர கால ஊர்தி சேவையின் கண்காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர், அவசர கால ஊர்தி பணியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். அப்போது, தமிழ்நாட்டில் 108 அவசர கால ஊர்தி சேவை மூலம் இதுவரை 1 கோடியே 17 லட்சத்து 40 ஆயிரம் நபர்கள் பயனடைந்துள்ளனர். 542 வாகனம் சிறப்பு வாகன பணியில் உள்ளது என்று கூறினார்.

பின்னர் செய்தியளார்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கலைஞர் காப்பீட்டுத் திட்டம் 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. ஆண்டு வருமானம் 72 ஆயிரத்திற்கும் குறைவாக இருப்பவர்கள் இந்த காப்பீட்டுத் திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் கடந்த மே 7ஆம் தேதிக்குப் பிறகு 106 கோடி பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்தும் முயற்சியில் மாநில அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியான தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறத. நாளை மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம்நாளை (செப்.26)  நடைபெறவுள்ளது.  மாநிலம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் முகாம்களில் 15 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்துவது  என இலக்கு  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 56 விழுக்காடு பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 17 விழுக்காடு பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதுவரை இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ள 22 லட்சம் பேர் நாளை (செப்.26) நடைபெறும் தடுப்பூசி முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், 60 வயதை தாண்டியவர்கள், கொரோனா 2ஆம் அலையில் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் 100 விழுக்காடு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

நாளை (செப்.26) மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளதால் திங்கட்கிழமை தடுப்பூசி போடும் பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை தடுப்பூசி முகாம் செயல்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் நாளை மீண்டும் 1600 மெகா தடுப்பூசி முகாம்…