நாகர்கோவில்:

ழுதுபட்டுள்ள சாலைகளை உடனே சீரமைத்து தரக்கோரி திமுக எம்எல்ஏ மனோதங்கராஜ் தலைமையில்  15 கி.மீ தூரம் நடைபயண போராட்டம் நடைபெற்றது. இறுதியில் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

நாகர்கோவில் அருகே உள்ள களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரை நெடுஞ்சாலை சேதமடைந்துள்ளது மற்றும் பத்மநாபபுரம் தொகுதி சாலைககளும் மோசமாக உள்ளது. இந்த சாலைகளை  சீரமைக்க வலியுறுத்தி தக்கலை முதல் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  திமுக சார்பில் நடைபயணப் போராட்டம் நடைபெற்றது.

இந்த நடைபயண போராட்டத்துக்கு திமுக எம்எல்ஏ மனோதங்கராஜ் தலைமை தாங்கினார். அவருடன் திமுகவினர் இணைந்து, சுமார்  15 கி.மீ நடந்து சென்று நாகர்கோவில் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து கூறிய,  திமுக சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ், கன்னியாகுமரி மாவட்டத்தில் பழுதான சாலைகளால் ஆயிரத்து 421 விபத்துக்களும், 211 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு காரணம் தரமறற சாலைகள் என்று குற்றம் சாட்டினார்.