சென்னை: தமிழ்நாட்டில் 15 டிஎஸ்பிகளுக்கு பதவி உயர்வு வழங்கி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, அவர்கள் கூடுதல் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு பெறுகின்றனர்.
இதுதாடர்பாக டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 15 துணை காவல், கண்காணிப்பாளர்களுக்கு கூடுதல் கண்காணிப்பாள ராக பதவி உயர்வு வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
அதன்படி, கே.பிச்சை, கே.எஸ். ரவிசந்திரன், டி. லோகநாதன், பி. வீரமணி, எஸ். ஈஸ்வரமூர்த்தி, வி. செங்கமலகண்ணன், எஸ். லயோலோ இக்னடியஸ், டி. ராஜகுமார், ஆர். ராஜசேகரன், ஜி.ஆர். ஆராஷூ, எஸ். கிருஷ்ணன், ஆர். முத்துசாமி, கே. பீர் மொஹிதீன், ஜி. சார்லஸ் கலைமணி, எஸ். மோகன் தம்பிராஜன் ஆகியோர் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக (Addl SP) பதவி உயர்வு பெற்றுள்ளனர்.