ந்தியாவின் பிரபல தொழில்நிறுவனங்களில் ஒன்றான டாடா நிறுவனம் 1932ம் ஆண்டு, அக்டோபர் 15ந்தேதி அன்று டாடா ஏர்லைன்ஸ் என்ற பெயரில் விமான நிறுவனத்தை தொடங்கியது. இந்தியாவில் முதன்முதலாக  விமான சேவையை தொடங்கி மக்கள் சேவையாற்றி வந்தது.

இந்தியாவின் முதல் உரிமம் பெற்ற விமானியும், புகழ்பெற்ற தொழிலதிபருமான  ஜே.ஆர்.டி. டாடா இந்த நிறுவனத்தை உருவாக்கினார். இந்த விமான நிறுவனம், இந்திய அரசால் பொதுவுடமை ஆக்கப்பட்ட நிலையில், பெருநஷ்டம் காரணமாக, சுமார் 89 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டாடா நிறுவனத்திடமே சென்றுள்ளது.

89ஆண்டுகளுக்கு முன்பு தாத்தா தொடங்கிய ஏர்இந்தியா நிறுவனத்தை மீண்டும் கைப்பற்றிய பேரன் ரத்தன் டாடா!