டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 20,038 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தொற்று மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது. 145 நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு 20ஆயிரத்தை கடந்துள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 4.44% ஆக உயர்ந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்றுகாலை 8மணி வரையிலான கொரோனா பாதிப்பு குறித்து தகவலை வெளியிட்டு உள்ளது. அதன்படி நாடு முழுவதும் கடந்த  24 மணி நேரத்தில், புதிதாக மேலும், 20,038 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,37,10,027 ஆக உயர்ந்தது.

தற்போதைய நிலையில் நாடு முழுவதும், 1,39,073 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.32% ஆக உள்ளது.

நேற்று ஒரே நாளில் மேலும் 47 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலும், நாடு முழுவதும் கொரோனாவுக்க உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,25,604 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆக உள்ளது.

கடந்த 24மணி நேரத்தில்,  16,994 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை  குணமடைந்தோர் எண்ணிக்கை 4,30,45,350 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.48% ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 1,99,47,34,994 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 18,92,969 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.