சென்னை: தமிழகத்தில் நேற்று (14ந்தேதி) புதிதாக மேலும் 12,772 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 828 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள்.

தமிழகத்தில் 12.772 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவியதுன், இதவரை  கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 23,66,493 ஆக உயர்ந்துள்ளது நேற்று மட்டும் சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு 254 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 29,801 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மேலும்  நேற்று ஒரே நாளில்  25,561 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 21,99,808 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 1,70,256 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 301,38,294 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தலைநகர் சென்னையில் நேற்று புதியதாக மேலும் 828 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 5,25,826 ஆகஅதிகரித்துள்ளது. நேற்று  28 பேர் உயிர் இழந்துள்ளார்.. இதுவரை சென்னையில் மட்டும் 7,854 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

தற்போது  சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 8,475 ஆகி உள்ளனர். அதேவேளையில் குணமடைவோர் அதிகரித்து வருகின்றனர். நேற்று  1,454 பேர் குணம் அடைந்துள்ளதுடன், இது மொத்தம் 5,09,497 பேர் குணம் அடைந்துள்ளனர்.

14.06.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 22,19,452 பேருக்கும், 14.06.2021 அன்று 16,886 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மண்டலம் வாரியாக விவரம்: