மும்பை: மகாராஷ்டிராவில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல வெளிமாநில தொழிலாளர்கள் ரயில் நிலையங்களில் குவிந்து வருகின்றனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகளும் பகுதிநேர  பொதுமுடக்கத்தை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில் மகாராஷ்டிராவில் வரும் 30ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்ப்பிக்கப்பட்டு உள்ளது.

அரசின் உத்தரவை தொடர்ந்து வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். வேலை, வருமானமின்றி மீண்டும் ஊரடங்கில் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளதாக கருதும் அவர்கள் உடைமைகளுடன் போக்குவரத்து வசதியை எதிர்பார்த்துள்ளனர்.

மும்பையில் உள்ள ரயில் நிலையத்தில் வெளிமாநில தொழிலாளர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்படுகிறது. கடந்த ஆண்டு பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட போது ஏராளமான தொழிலாளர்கள் பலர் நடந்தே சொந்த ஊர்களுக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.