சென்னை: தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தி உள்ளார்.

தந்தை பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்றும், இன்றைய தினம் அரசு அலுவலகங்கள் சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று  சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள பெரியார் திருவுருவ சிலைக்கு கீழே அமைந்துள்ள படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

[youtube-feed feed=1]