மதுரை: மதுரை அருகே கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட 1400 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக லாரி ஓட்டுநர் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்பட அனைத்து வகையான போதைப்பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை தடை செய்யப்பட்டு உள்ளது. இருந்தாலும் பல பகுதிகளில் போதைபொருட்கள் நடமாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. இதை கண்டிக்க வேண்டிய காவல்துறையினர், மவுனம் சாதித்து வருகின்றனர். ஆனால் முதல்வர் ஸ்டாலினோ போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் விழிப்பாக இருந்து போதைபொருள் பயன்பாட்டை தடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து வருகிறார்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரியிலிருந்து மதுரைக்கு கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட டன் கணக்கிலான போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
முன்னதாக இதுகுறித்து, போதை பொருள் கடத்தல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில், கிருஷ்ணகிரியிலிருந்து மதுரைக்கு வரும் கோழி தீவனம் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியில் போதைப் பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தன. குறிப்பிட்ட லாரி மதுரை சர்வேயர் காலனி பகுதிக்கு வந்தபோது, அதை மறித்த காவல்துறையினர், அந்த கண்டெய்னர் லாரியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதனுள் டன் கணக்கில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.
மொத்தம், 94 மூட்டையில் 1 400 கிலோ கொண்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், ம் கண்டெய்னர் லாரி உள்ளிட்ட 4 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக லாரி ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.