சென்னை: ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை நாளை காலை பதவி ஏற்க உள்ள நிலையில், கருணாநிதி அமைச்சரவையில் இடம்பெற்ற 14 முன்னாள் அமைச்சர்கள் ஸ்டாலின் அமைச்சரவையிலும் இடம்பெற்றளளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 34 பேர் புதிய அமைச்சரவை நாளை காலை பதவி ஏற்க உள்ளது. இந்த அமைச்சரவையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் அமைச்சரவையில் இடம்பெற்று சிறப்பாக பணியாற்றிய மூத்த அமைச்சர்கள் 14 பேருக்கு ஸ்டாலின் அமைச்சரவையில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
மூத்த அமைச்சர்களின் ஆலோசனை அரசுக்கு அவசியம் என கருதி கடந்த 2006ல் இருந்து 11 வரை அமைச்சராக இருந்த 14 பேர் மீண்டும் அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளார் ஸ்டாலின். அவர்கள் விவரம்…
- முதலமைச்சராகும் மு க ஸ்டாலின்
- துரைமுருகன்
- பொன்முடி
- கே.என்.நேரு
- ஐ.பெரியசாமி
- ஏ.வா.வேலு
- எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
- கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
- தங்கம் தென்னரசு
- பெரிய கருப்பன்
- தா.மோ. அன்பரசன்
- வெள்ளக்கோவில் சாமிநாதன்
- கீதா ஜீவன்
- தா.ராமச்சந்திரன்