நாளை மதியம் முதல் மணிப்பூரில் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல் 

Must read

ம்பால்

ணிப்பூர் மாநிலத்தில் நாளை மதியம் முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

கொரோனா பாதிப்பு தொடங்கிய காலத்தில் வடகிழக்கு மாநிலங்களில் அதிக பாதிப்பு இல்லாமல் இருந்தது.

இதுவரை மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், மணிப்பூர் மாநிலங்களில் உயிரிழப்பு இல்லை.

கடந்த சில நாட்களாக மணிப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இங்கு 2060 பேர் பாதிக்கப்பட்டு 1418 பேர் குணம் அடைந்து தற்போது 642 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோஒனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர மணிப்பூர் மாநில அரசு ஊரடங்கைத் தீவிரப்படுத்த முடிவு எடுத்துள்ளது.

அதன்படி 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளது.

நாளை மதியம் முதல் ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

More articles

Latest article