அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் கொரோனா சோதனை நடத்தப்பட்ட 151 பேரில் 138 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தொற்று இடம், பொருள், காலநிலைக்கு ஏற்ப தன்னை உருமாற்றிக்கொண்டிருக்கிறது. தற்போது ஆல்பா, டெல்டா என பல உருவங்களில் பரவி வருவதுடன், சமீப நாட்களாக வீரயமுடன் உருமாறிய நிலையில், பரவி வருகிறது. இதற்கு டெல்டா பிளஸ் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் தொற்றை தடுப்பூசிகளால் தடுக்க முடியாது என்றுகூறப்படுகிறத.
இந்த நிலையில், திரிபுராவில் 138 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட 151 பேரின் RT-PCR மாதிரிகள், கொல்கத்தாவில் உள்ள ஆய்வகத்திற்கு மரபணு தர ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் 138 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டது உறுதியானது. மேலும், 10 பேருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பும், 3 பேருக்கு ஆல்ஃபா வைரஸ் பாதிப்பும் உறுதி செய்யப்பட்டதாக மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.