கூகிள் மேப் மற்றும் Google My Business – இல்போலி நிறுவனங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான போலி நிறுவனங்கள் சேர்க்கப்படுவதாகவும், 1.1 கோடி போலி நிறுவன மற்றும் சேவை விபரங்கள் போலியாக சேர்க்கப்பட்டுள்ளது.

இதில், பெரும்பாலான வியாபாரம் மற்றும் சேவை நிறுவனங்கள் அவர்கள் கொடுத்துள்ள முகவரியில் இல்லை , குறிப்பாக வணிக நிறுவனங்கள், மெக்கானிக்குகள் குறிப்பிட்ட முகவரியில் இல்லை என்று வால்ட் ஸ்ட்ரீட் ஜேர்னல் (WSJ) ன் ஆய்வு தெரிவிக்கிறது.

அதே சமயம்  2017ல் கூகிள் நிறுவனமே நடத்தி ஆய்வில்  உள்ளூர் தேடல் முடிவுகளில்  0.5% போலியானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

வால்ட் ஸ்ட்ரீட் ஜர்னல் ன்  தனியான விசாரணையில்  கூகிள் தேடலில் முதல் 20 முடிவுகளில் 13 போலியானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக இரண்டு நிறுவனங்கள் மட்டுமே கூகிள் தேடலில் உண்மையானவையாக இருந்தது

அதே சமயம் கூகிள் நிறுவனமும் தனது மை பிசினஸ் லிஸ்ட்டில் சேர்க்கப்படும் விபரங்களை உறுதிபடுத்த பல்வேறு வழிமுறைகளை கையாள்கிறது, குறிப்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் முகவரிக்கு ஒரு தபால் அட்டை ஒன்றை அனுப்பி அதில் உள்ள பாதுகாப்பு எண்ணினை உறுதி படுத்தினால் மட்டுமே அந்த முகவரி கூகிள் இல் சேர்க்கப்படுகிறது. இவ்வளவு வழிமுறைகள் இருந்தும் ஏறக்குறைய 1.1 கோடி போலி நிறுவனங்கள் இருப்பது கூகிளுக்குத்தான் சிக்கல், மேலும் உண்மையாக வணிகம் செய்பவரையும் இது பாதிக்கிறது.

எனவே கூகிள் நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய வழிமுறைகளை க்டறிய புதிய வழிமுறை களை செயல்படுத்த  உள்ளதாக தெரிவித்துள்ளது

-செல்வமுரளி