Skip to content
  • Mon. Sep 21st, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

எல்என்சி பாய்லர் வெடித்து 13 பேர் பலி: மேலாண் இயக்குனருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Jul 8, 2020

நெய்வேலி:

என்எல்சியில் பாய்லர் வெடித்த விபத்தில்  13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய, என்எல்சி மேலாண் இயக்குனர் மற்றும் தமிழக தொழிலாளர் நல ஆணையருக்கும்  தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஜூலை 1-ந்தேதி நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில்  பாய்லர்  வெடித்து விபத்து ஏற்பட்டது.  இதனால் அந்த பகுதியில் தீ பிடித்த நிலையில், அங்கு பணியில் இருந்த சுமார் 20க்கும் மேற்பட்டோர் சிக்கி தீக்காயம் அடைந்தனர்.

இந்த கோர விபத்தின்போது, சம்பவ இடத்திலேயே  6 தொழிலாளர்கள உயிரிழந்த நிலையில், மேலும் 17 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு  13 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில்,  என்எல்சி விபத்து தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய என்எல்சி மேலாண் இயக்குனருக்கும், தமிழக தொழிலாளர் நல ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Post navigation

கொரோனா பீதிக்கு மத்தியில் ரூ. 12ஆயிரம் கோடி நெடுஞ்சாலை டெண்டர்… அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு
அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா: தொலைபேசியில் நலம் விசாரித்த ஸ்டாலின்

Related Post

தமிழ் நாடு

வீட்டுக்கூரை சூரியசக்தி திட்டத்திற்கு தமிழக அரசு மானியம்… சோலார் பேனல் அமைக்க ரூ.1 லட்சம் வரை மானியம்!

தமிழ் நாடு

தமிழகத்தில் புதிதாக 7 அரசு செவிலியர் கல்லூரிகள்! இந்த ஆண்டு முதலே மாணவர் சேர்க்கை…

தமிழ் நாடு

₹2,109 கோடி பாக்கி… தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறும் ஒப்பந்ததாரர்கள்!

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer