சென்னை:
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் மிகத்தீவிரமாக பரவி வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறனர்.
சென்னையில் 28924 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போதைய நிலையில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 13,493 பேர். சென்னையில் இதுவரை 14, 614பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 290 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்
சென்னையில் தற்போது 360 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. வடசென்னை பகுதியில் குறிப்பாக ராயபுரம், தண்டையார்பேட்டை பகுதிகளில் கொரோனா பரவல் உச்சம் அடைந்துள்ளது. அங்கு சமூக பரவலாக இருக்கும் என நம்பப்படுகிறது. ஆனால், மாநில அரசு, சமூக பரவல் இல்லை என்று மறுத்து வருகிறது. அங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.
அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 4821 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை மண்டலத்தில் 3464 பேருக்கும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 3108 பேருக்கும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 3781 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,
சென்னையில் மண்டல வாரியாக கொரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு வருகிறது அதன் விவரம்:
மண்டல எண் | மண்டலம் | மொத்த கொரோனா நோயாளிகள் |
மண்டலம் 01 | திருவொற்றியூர் | 1072 |
மண்டலம் 02 | மணலி | 418 |
மண்டலம் 03 | மாதவரம் | 780 |
மண்டலம் 04 | தண்டையார்பேட்டை | 3781 |
மண்டலம் 05 | ராயபுரம் | 4821 |
மண்டலம் 06 | திருவிக நகர் | 2660 |
மண்டலம் 07 | அம்பத்தூர் | 987 |
மண்டலம் 08 | அண்ணா நகர் | 2781 |
மண்டலம் 09 | தேனாம்பேட்டை | 3464 |
மண்டலம் 10 | கோடம்பாக்கம் | 3108 |
மண்டலம் 11 | வளசரவாக்கம் | 1268 |
மண்டலம் 12 | ஆலந்தூர் | 587 |
மண்டலம் 13 | அடையாறு | 1607 |
மண்டலம் 14 | பெருங்குடி | 536 |
மண்டலம் 15 | சோழிங்கநல்லூர் | 527 |
மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் | 527 |
மொத்தம்: 28,924