டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு மொத்த எண்ணிக்கை 5,488 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று 3வது அலை தொடங்கி உள்ள நிலையில் ஒமிக்ரான் தொற்றும் பரவி வருகிறது. உலக நாடுகளில் மீண்டும் அதிகரித்து வரும் தொற்று பரவலால் மேலும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தற்போது உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 31,76,27,277-ஆக உள்ளது. இதுவரை 55,31,118 போ் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை 26,28,93,376 போ் குணமடைந்துள்ளனர். இருந்தாலும், 4,92,02,783 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். உலக தொற்று பாதிப்பில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.
இந்தியாவில், நேற்று முன்தினம் பாதிப்பு சற்று குறைந்து 1 லட்சத்து 68 ஆயிரத்து 63 ஆக பதிவானது. நேற்று இந்த எண்ணிக்கை 1 லட்சத்து 94 ஆயிரத்து 720 ஆக பதிவானது. இன்று ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டி பதிவாகி உள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 27 சதவீதம் அதிகமாகும், (இதில் மராட்டிய மாநிலத்தில் மட்டும் 46,723 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்).
மத்திய சுகாதார அமைச்சகம் இன்ற காலை 8 மணி வரையிலான கொரோனா பாதிப்பு மற்றும் ஒமிக்ரான் தொற்று தொடர்பாக வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,63,17,927 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,85,035 ஆக உயர்ந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் 11,17,531 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதே வேளையில் இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றும் பரவி வருகிறது. தற்போது 28 மாநிலங்களில் 5,488 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில், பேர் குணமடைந்துள்ளனர்.
அதிக பட்ச பாதிப்பு உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா தொடர்கிறது. அங்கு ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட 1,347 பேரில், இதுவரை 734 பேர் குணமடைந்துள்ளனர், ராஜஸ்தானில் 792 பேருக்கும், தலைநகர் டெல்லியில் 549 பேருக்கும், கேரளாவில் 486 பேருக்கும், கர்நாடகத்தில் 479 பேருக்கும், மேற்கு வங்காளத்தில் 294 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 275 பேருக்கும், தெலுங்கானாவில் 260 பேருக்கும், குஜராத்தில் 236 பேருக்கும், தமிழ்நாட்டில் 185 பேருக்கும், ஒடிசாவில் 169 பேருக்கும், அரியானாவில் 162 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 792 பேரில் இதுவரை 510 பேர் குணமடைந்துள்ளனர் என்றும், டெல்லியில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 549 பேரில் இதுவரை 57 பேர் குணமடைந்துள்ளனர் என்றும், கேரளாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 486 பேரில் இதுவரை 140 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.