சென்னை: பொது இடங்களில் ‘மாஸ்க்’ அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கும் அரசாணையை  தமிழகஅரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  பள்ளிகள் மூடப்பட்டு, பொது நிகழ்ச்சிகளுக்கும் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி சனி, ஞாயிறு அடைக்கப்படுகிறது. ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தொற்று பரவலை முற்றிலும் குணப்படுத்தும்  வகையில்,பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும் என்று தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.  ஏற்கனவே பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கான அபராதத்தை ரூ.200 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.500 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இனி பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.500 அபராதம் வசூலிக்கபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.