சென்னை: கொரோனா தொற்றால் ஒத்தி வைக்கப்பட்டுள்ள 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எப்போது நடத்துவது என்பது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு செய்முறை தேர்வு முடிவடைந்த நிலையில், பொதுத்தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. கொரோனா பாதிப்பு தீவிரம் காரணமாக மே மாதம் நடைபெற இருந்த தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக, வரும் திங்கட்கிழமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தத உள்ளார்.
ஏற்கனவே 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ள மற்ற மாணாக்கர்களுக்கும் தேர்சி, மதிப்பெண் வழங்குவது மற்றும், ஆன்லைன் கல்வி உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.