சென்னை: தமிழ்நாட்டில், 12ம்வகுப்பு (+2) பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை டிபிஐ வளாகத்தில் வெளியிடப்படு கிறது. அதே வேளையில் இணைதளத்திலும் வெளியாகிறது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் காரணமாக பொதுத்தேர்வுமுடிவுகள் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று (மே 8ந்தேதி) பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள இந்த தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.
முன்னதாக, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை நடைபெற்றது. தள்ளிப்போகும் என தகவல் பரவிய நிலையில் இன்று வெளியாகிறது.