குன்னூர்: உதகை தாவரவியல் பூங்காவில் 124வது மலர் கண்காட்சிஇரண்டு ஆண்டுகளுக்கு பிறக இன்று தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது. தமிழக முதல்வர் மலர் கண்காட்சியை இன்று திறந்து வைக்கிறார். இதையொட்டி நீலகிரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

3நாள் பயணமாக கோவை நீலகிரி மாவட்டம் சென்றுள்ள முதல்வர் நேற்று கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். பின்னர், கோவை பயணத்தை முடித்துக் கொண்டு நீலகிரி மாவட்டம் உதகைக்கு புறப்பட்ட ஸ்டாலினுக்கு குன்னூர் பகுதியில் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது மந்து என்ற இடத்தில் தனது காரை விட்டு கீழிறங்கிய ஸ்டாலின் அங்கிருந்த தோடர் பொதுமக்களுடன் சேர்ந்து நடனமாடினார். பின்னர் அங்கிருந்தவர்கள் முதலமைச்சருடன் செல்பி எடுத்துக் கொண்டார். அதைத்தொடர்ந்து நேற்று ஊட்டியில் தங்கினார்.

ஊட்டியில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக  மலர் கண்காட்சி நடைபெறாத நிலையில், இந்த நிலையில் மலர் கண்காட்சி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊட்டியில் கோடை விழாவை தொடங்கி வைக்கும்  முதல்வர் ஸ்டாலின் முதல் நிகழ்ச்சியாக ஊட்ட தாவரவியல் பூங்கா கண்காட்சியை  இன்று காலை  10 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.

ஊட்டி தாவரவியல் பூங்காவில் 124-வது மலர் கண்காட்சி 20-ந்தேதி இன்று முதல் வருகிற 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இந்த கண்காட்சியை தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின், தனது மனைவியுடன் மலர் கண்காட்சி மலர் மாடங்களை பார்வையிடுகிறார். மலர்க்கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.