சென்னை: அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதற்கு ஆசிரியர் சங்கத்தின் பரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

கடந்த 20212ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, அரசு பள்ளிகளில்   உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டக்‘கலை, கட்டிடக்கலை மற்றும் வாழ்க்கை கல்வி ஆகிய கற்பிக்கும் வகையில் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அதன்படி,  16,549 பகுதி நேர ஆசிரியர்கள் ரூ.5 யிரம் சம்பளத்தில் நியமனம் செய்யப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு சம்பளம் படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது 10ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இவர்களில்  12 ஆயிரம் பேர் மட்டுமே தற்போது பணிபுரிந்து வருகின்றனர்.‘

இந்த ஆசிரியர்கள் தரப்பில் தங்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது இதை திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்து,   பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று தெரிவித்து உள்ளார்.  மேலும், தமிழக பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், ஆங்கில வழி பாடப் பிரிவுகளை அதிகரிக்கவும், அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் மாதிரி மேல்நிலைப் பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியவர்,  பள்ளி மாணவர்களின் பயம் போகும் வழியில் அரையாண்டு, முழு ஆண்டு தேர்விற்கு பதிலாக திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.