டில்லி :
கடந்த, 2013 ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 12,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

விவசாயிகள் தற்கொலையை தடுக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக பொதுநல வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.எஸ்.நரசிம்மா, விவசாயிகளுக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டங்களை விரித்ததோடு, விவசாயிகளுக்கு நிதி ஆயோக் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்தும் தெரிவித்தார்.
மேலும் அவர், “விவசாயிகளின் வருமானத்தை பெருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பெரும்பாலான விவசாயிகள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதால் துரதிஷ்டவசமாக தற்கொலை சம்பவங்கள் நடக்கின்றன. 2022 ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது
2015 ம் ஆண்டில் விவசாயிகள் தற்கொலையில் மகாராஷ்டிரா முதலிடம் வகிக்கிறது. அந்த ஆண்டு. மகாராஷ்டிராவில் 4291, கர்நாடகாவில் 1569, தெலுங்கானா – 1400, ம.பி.,யில் – 1290, சட்டீஸ்கர் – 954, ஆந்திரா – 916, தமிழகம் – 606 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
2013ம் ஆண்டு 11,772 ஆக இருந்த விவசாயிகள் தற்கொலை 2014 ல் 12,360 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவித்தார்.
[youtube-feed feed=1]