சென்னை: தமிழகத்தில் 2 ஐஜிக்கள் உட்பட 12 காவல் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான உயர் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், தற்போது மேலும் சென்னை: தமிழகத்தில் 2 ஐஜிக்கள் உட்பட 12 காவல் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் தமிழ்நாடு  உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர்  உத்தரவிட்டு உள்ளார். அதன் விவரம் வருமாறு,

1. ரயில்வே போலீஸ் ஐஜியாக (சென்னை) பதவி வகிக்கும் சுமித் சரண் மாற்றப்பட்டு, ஊர்க்காவல் படை ஐஜியாக (சென்னை) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2. பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு (சென்னை) ஐஜியாகப் பதவி வகிக்கும் தினகரன் மாற்றப்பட்டு, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

3. திருச்சி ஆயுதப்படை டிஐஜியாகப் பதவி வகிக்கும் கயல்விழி மாற்றப்பட்டு, சென்னை காவலர் பயிற்சிக் கல்லூரி டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்

4. திருவாரூர் மாவட்ட எஸ்.பி.

4. திருவாரூர் மாவட்ட எஸ்.பி. வி.ஆர்.சீனிவாசன், திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

5. சிபிசிஐடி சிறப்புப் பிரிவு (சென்னை) எஸ்.பி. விஜயகுமார், திருவாரூர் மாவட்ட எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

6. திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ரவாளி பிரியா, தஞ்சாவூர் எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

7. தஞ்சாவூர் எஸ்.பி. தேஷ்முக் ஷேகர் சஞ்சய், ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

8. ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா, சைபர் குற்றப்பிரிவு எஸ்.பி-2 ஆக (சென்னை) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

9. அடையாறு காவல் துணை ஆணையராகப் பதவி வகித்து வரும் விக்ரமன், சிபிசிஐடி சிறப்புப் பிரிவு (சென்னை) எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

10. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியாகப் பதவி வகித்து வரும் தேவராணி, சைபர் குற்றப்பிரிவு எஸ்.பி-3 ஆக (சென்னை) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

11. சைபர் குற்றப்பிரிவு எஸ்.பி-2 ஆக (சென்னை) அருண் பாலகோபாலன், பரங்கிமலை (சென்னை) துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

12. நில மோசடி தடுப்பு சிறப்புப் பிரிவு எஸ்.பி. ஷியாமளா தேவி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவின் (சென்னை) துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.