டெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கடந்த 24மணி நேரத்தில் 41,195 பேர் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதுடன், 490 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகரித்து வரும் பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும்  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41 ஆயிரத்து 195 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,20,77,706 ஆக அதிகரித்துள்ளது. கடந்த வாரம் சற்று குறைந்த பாதிப்பு இந்த வாரம் மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட  இன்று மேலும் 2,842பேருக்கு அதிகம் தொற்று பரவியுள்ளது.

நேற்று மட்டும் சிகிச்சை பலனின்றி கொரோனா நோயாளிகள்  490 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,29,669 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.34% ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில்  39,069  பேர் கொரோனா பாதிப்பில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,12,60,050  ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.45 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும 3,87,987 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 52,36,71,019 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 44,19,627 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது இருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.