சென்னை: 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. இதில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. 10அரசு பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

அரசு தேர்வுகள் இயக்ககம் ஏற்கனவே அறிவித்தபடி இன்று காலை 10மணி அளவில் இணையதளத்தில் 11ம்  வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது. www.tnresults.nic.in, www.deg.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தேர்வு முடிவுகளை அறியலாம் என கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு ள்ளது.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 90.07 சதவிகித மாண மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் 95.56% தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 95.44% தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் 2வது இடத்தையும்,  95.25% தேர்ச்சியுடன் மதுரை மாவட்டம் 3வது இடத்தையும் பிடித்துள்ளது என  பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

பிளஸ் 1 தேர்வு எழுதிய 8,43,675 பேர் தேர்வு எழுதிய நிலையில், 7,59,856 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  கடந்த ஆண்டை விட 5.97 சதவிகிதம் குறைவு. இந்த தேர்வில் 94.99% மாணவிகள் மற்றும் 84.86% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10.13% கூடுதலாக தேர்ச்சி என  தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,  பிளஸ் 1 பொதுத்தேர்வை 41,376 மாணவர்கள் எழுதவில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக 10 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.