சென்னை:

11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் நாளை பிற்பகல் 2 மணிக்கு இணையதளத்தில் வெளியாவதாக தேர்வுத்துறை அறிவிப்பு உள்ளது.

கடந்த மார்ச் மாதம் 12ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் 11, 12ம் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை (மறுகூட்டல், மறுமதிப்பீடு உள்பட) அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் ஜூன் 3-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து, , தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் உரிய முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு ஜூலை 11 மற்றும் 12 ஆகிய ரு தினங்களில் நேரில் சென்று உரிய கட்டணம் (விடைத்தாள் நகல் (ஒவ்வொரு பாடத்துக்கும்) -ரூ.275, மறுகூட்டல் (உயிரியல் பாடத்துக்கு – ரூ.305) (ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205) செலுத்தி பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பித்த பின் வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வுத் துறையால் அறிவிக்கப்படும் தேதியில் விடைத்தாள்களின் நகல்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யவும், மறுகூட்டல் குறித்து அறியவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் நாளை பிற்பகல் 2 மணிக்கு இணையதளத்தில் வெளியாகும் என்று  தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.