காந்திநகர்

குஜராத் மாநிலத்தில் நடந்த நீதிபதிகள் பதவி உயர்வு தேர்வு எழுதிய 119 நீதிபதிகள் மற்றும் 1372 வழக்கறிஞர்கள் அனைவரும் தேர்ச்சி பெறவில்லை.

குஜராத் மாநில நீதிபதிகள் தேர்வு விதிகளின்படி 65% காலி இடங்களுக்கு மூத்த நீதிபதிகள் பதவி உயர்வு மூலம் நியமிக்கப்படுவது வழக்கமாகும்.  மீதமுள்ள இடங்களில் 25% வழக்கறிஞர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டு நியமன்ம் செய்வது வழக்கமாகும்.  பாக்கி உள்ள 10% இடங்களைக் கூடுதல் மாவட்ட நீதிபதிகளில் இருந்து தேர்வு செய்து நிரப்பப்படும்.

தற்போது குஜராத் நீதிமன்றங்களில் 40 இடங்கள் காலியாக உள்ளன.  இவற்றில் 26 பேர் வழக்கறிஞர்களில் இருந்து தேர்வு செய்யப்பட வேண்டும்.   மற்றும் 14 இடங்களுக்கு மாவட்ட நீதிபதிகளிடம் இருந்து தேர்வு செய்யப்பட வேண்டும்.  இதற்கான தேர்வுக்கான விண்ணப்பங்கள் கடந்த மார்ச் மாதம் பெறப்பட்டது.

இந்த தேர்வுக்கு 1372 வழக்கறிஞர்களும், 119 மாவட்ட நீதிபதிகளும் விண்ணப்பித்திருந்தனர்  கடந்த ஜூன் மாதம் நடந்த இந்தத் தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என தற்போது குஜராத் நீதிமன்றம் அறிவித்துள்ளது.  இந்த 119 நீதிபதிகளில் 51 பேர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பொறுப்பில் உள்ளவர்கள் ஆகும்.