சென்னை: தமிழ்நாட்டில் கடந்த இரு ஆண்டுகளில் ஏராளமான ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அடுத்தடுத்து மாற்றப்பட்டு வரும் நிலையில், தற்போது
11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் பல மாநகராட்சி அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழ்நாட்டில் நிர்வாண காரணங்களுக்காக அவ்வவ்போது ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். மேலும் முதலமைச்சரின் கள ஆய்வின்போது முறையான பதில் தெரிவிக்காத அதிகாரிகளும் மாற்றப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தற்போது,  பல்வேறு முக்கிய துறைகளில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மொத்தம் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில், முக்கியமாக, 10 மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி,

கோவை மாநகராட்சி ஆணையர் எம்.பிரதாப், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, திருவாரூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன் மாநகராட்சி ஆணையர்கள் பலரும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

நெல்லை மாநகராட்சி ஆணையராக தாக்கரே சுபம் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக இருந்த சிவகிருஷ்ணமூர்த்தி, ஈரோடு மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரவீன்குமார், சென்னை மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆவடி மாநகராட்சி ஆணையர் கே.தர்பகராஜ், உயர்க்கல்வித்துறை துணைச் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஆவடி மாநகராட்சி ஆணையராக ஷேக் அப்துல் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக இருந்த எல்.மதுபாலன், மதுரை மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாநகராட்சி ஆணையராக எம்.சிவகுரு பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக தாக்கரே சுபேம் நியமிக்கப்பட்டுள்ளார்.
திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா, சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.