சென்னை: தமிழக அரசில் காலியாக உள்ள 5,529 காலி பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்ஹஹவ 21ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை  11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்து உள்ளது.

தமிழகஅரசில் காலியாக உள்ள 5,529 காலி பணியிடங்களுக்கு வருகிற 21ம் தேதி குரூப் 2, குரூ 2ஏ  தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான  முதல் நிலை தேர்வு  வரும் 21ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வை 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர். இதில் குரூப் 2 பதவி(நேர்முக தேர்வு பதவி) 116 பணியிடம். குரூப் 2ஏ(நேர்முகத் தேர்வு அல்லாத பதவி) பதவியில் 5,413 இடங்கள் என மொத்தம் 5,529 காலி பணி இடங்கள் நிரப்பப் படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த தேர்வை எழுத இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் என்று போட்டிபோட்டு  11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பேர் விண்ணப்பித்தனர்.   இது டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் புதிய சாதனை. இந்த நிலையில் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான முதல்நிலை தேர்வு வருகிற 21ம் தேதி(சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 4,012 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வில் பங்கேற்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது.

தேர்வு நடைபெறும் மையங்களில் அதிரடி சோதனை நடத்தவும் டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது.