சென்னை: தமிழகத்தில் புதிதாக மேலும் 3,086 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பரவல் குறைந்து வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று இரவு 7மணி அளவில் வெளியிட்ட அறிக்கைகையில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 1,06,514 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 3,086 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 34 லட்சத்து 31 ஆயிரத்து 154 பேர் ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் மேலும் 14,051 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் காரணமாக இதுவரை 33 லட்சத்து 37 ஆயிரத்து 265 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது மாநிலம் முழுவதும 56,002 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுகின்றனர்.
நேற்று மட்டும் சிகிச்சை பலனின்றி த 25 பேர் உயிரிழந்தனர். அரசு மருத்துவமனைகளில் 11 பேரும், தனியார் மருத்துவமனையில் 14 பேரும் நேற்று உயிரிழந்தனர். இதையடுத்து மொத்தம் 37,887 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் அதிக பட்சமாக சென்னையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாவட்டம் வாரியாக பாதிப்பு:
அரியலூர் 11
செங்கல்பட்டு 261
சென்னை 590
கோவை 569
கடலூர் 42
தருமபுரி 25
திண்டுக்கல் 16
ஈரோடு 154
கள்ளக்குறிச்சி 18
காஞ்சிபுரம் 68
கன்னியாகுமரி 75
கரூர் 38
கிருஷ்ணகிரி 45
மதுரை 42
மயிலாடுதுறை 5
நாகப்பட்டினம் 32
நாமக்கல் 83
நீலகிரி 53
பெரம்பலூர் 5
புதுக்கோட்டை 28
ராமநாதபுரம் 12
ராணிப்பேட்டை 31
சேலம் 165
சிவகங்கை 27
தென்காசி 5
தஞ்சாவூர் 59
தேனி 12
திருப்பத்தூர் 7
திருவள்ளூர் 125
திருவண்ணாமலை 33
திருவாரூர் 40
தூத்துக்குடி 19
திருநெல்வேலி 34
திருப்பூர் 193
திருச்சி 87
வேலூர் 17
விழுப்புரம் 32
விருதுநகர் 28