அகமதாபாத்:

பாரதிய ஜனதா ஆட்சி செய்து வரும் குஜராத் மாநிலத்தில் 10வயது சிறுமி ஒருவர் திருமணத்துக்காக ரூ.ஒன்றரை லட்சம் விலை பேசப்பட்டு, ரூ. ரூ.50 ஆயிரம் முன்பணம் கொடுத்து, திருமணம் செய்துள்ள நிகழ்வு  அதிர்ச்சியையும், மாநில பாஜக அரசின் அவலத்தையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

குஜராத் மாநிலத் பனஸ்கந்தாவைச் சேர்ந்த பத்து வயது பழங்குடி சிறுமியை அசர்வாவைச் சேர்ந்த 35 வயது இளைஞர் ஒருவர் திருமணம் செய்துகொண்டுள்ளார். முதல்கட்ட விசாரணையில் அந்த சிறுமி ரூ.50ஆயிரத்துக்கு அந்த இளைஞரிடம் விற்கப்பட்டதாக கூறப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில், திருமணம் செய்த இளைஞரின் உறவினர் வீட்டில் இருந்து அந்த சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.

இதில் கொடுமையான விஷயம் என்ன வென்றால், 10 வயது சிறுமியை திருமணம் செய்தவர், அந்த சிறுமியின் தந்தையைவிட வயது மூத்தவர். இந்த அவலம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கூறிய  மகேலா குற்றப்பிரிவின் ஏசிபி கே.எம். ஜோசப், குபர்நகர் பகுதியில், உள்ள ஒருவர் வீட்டில் இருந்து  சிறுமி மீட்கப்பட்டு,  ஒதாவிலுள்ள பெண்களின் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார், அங்கு சமூக-சட்ட வழக்குகளில் சிறுமிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்று ஜோசப் கூறினார்.

இது சிறுமி திருமணம் தொடர்பாக  பனஸ்கந்தா மாவட்டத்தின் ஹதாத் காவல் நிலையத்தில் சமூக நீதித்துறையின் பாதுகாப்பு அதிகாரியால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளளார்.

முன்னதாக, அந்த சிறுமியின் திருமணம் தொடர்பான வீடியோ ஒன்று  சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்தே, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த வீடியோவை பார்த்த பாலன்பூர் அலுவலகத்தில் பணி புரியும் சமூக நீதித்துறை அதிகாரி ஒருவர் கொடுத்த புகாரைத் தொடர்ந்தே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், சிறுமியை திருமணம் செய்தவர் பெயர், கோவிந்த் தாகூர் என அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், அவருக்கு 35 வயதாகிறது என்று தெரிவித்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறை அதிகாரிகள், அந்த சிறுமியின் சொந்த கிராமமான பனஸ்கந்தாவில் உள்ள தாந்தா தாலுகாவின் கெர்மல் கிராமத்துக்கு சென்று அந்த சிறுமியின் தந்தையை அடையாளம் கண்டதாகவும், அவரும் சிறுமியின் திருமணத்தை உறுதிப்படுத்தியதுடன்,  சிறுமியை தாகூர் ரூ .50,000 க்கு வாங்கிக்கொண்டார் என்றும், அதைத்தொடர்ந்து, கடந்த ஆகஸ்டு மாதம் திருமணம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

விசாரணையில், அந்த சிறுமிக்கு ரூ.ஒன்றரை லட்சம் விலை பேசி தரகர் மூலம், விற்பனை ஒப்பந்தம் போடப்பட்டதாக வும், முதல் கட்டமாக ரூ.50 ஆயிரம் செலுத்தி திருமணம் செய்துள்ளதாகவும், மீதமுள்ள ரூ.1 லட்சம் திருமணத்திற்குப் பிறகு செலுத்தப்பட வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், சிறுமியை திருமணம் செய்த தாகூர், ஒப்பந்தப்படி மீதமுள்ள ரூ.1 லட்சம் தர மறுத்தால், ஏற்பட்ட பிரச்சினை காரணமாக,   தாக்கரை மிரட்டடும் வகையில், தரகர் கமார் என்பர் வீடியோவை வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த வீடியோ சமூக நல அதிகாரிகள் பார்வைக்கு சென்ற பிறகே, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், சிறுமியை திருமணத்துக்கா விற்பனை செய்ததற்காக, குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் சிறுமியின் தந்தை, அவரது கணவர் மற்றும் முகவர் உள்ளிட்ட மூன்று பேர் மீது ஹதாத் போலீசார் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Thanks: TOI