புதுச்சேரி: 10ம் வகுப்பு தேர்வு முடிகள் இன்று தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் வெளியிடப்பட்டன. இதில் 89.14 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக அம்மாநில கல்வித்துறை அறிவித்து உள்ளது.
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மொத்த தேர்ச்சி சதவிகிதம் 89.14, அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவிதம் 78.08 ஆகும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியின் மொத்த தேர்ச்சி விகிதம் கடந்தாண்டைவிட இந்தாண்டு அதிகரித்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 14,952 மாணவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். அவர்களில் 13,328 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 90 எனவும், காரைக்காலில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 17 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய 9 லட்சம் மாணவ, மாணவிகளில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (மே10) காலை 9.30 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 91.55% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 9.03 லட்சம் பேர் இந்த தேர்வு எழுதிய நிலையில் 8,18,743 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மாணவிகள் 94.53 % பேர் தேர்ச்சி பெற்றுள்னர். மாணவர்கள் 88.50 % தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 91.55% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 260 சிறைவாசிகள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய நிலையில் 228 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 87.69% தேர்ச்சியாகும். அதுபோல தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவர்கள் 92.45% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் .10-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய 13,510 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 12,491 தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்றவர்கள் – 8,18,743 (91.55%) மாணவியர் – 4,22,591 (94.53 %) தேர்ச்சி மாணவர்கள் – 3,96,152 (88.58%) தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டு மாணவர்களை விட மாணவியர் 5.95 % அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.