சென்னை: 10-ம் வகுப்பு துணைத் தேர்வு எழுத விரும்புபவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும், மறு கூட்டல் / மறு மதிப்பீடுக்கு 15ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10-ம் வகுப்பு துணைத் தேர்வு எழுத விரும்புபவர்கள் நாளை (மே 11) முதல் விண்ணப்பிக்கலாம்.

மறு கூட்டல் / மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிக்க விரும்பும்‌ பள்ளி மாணவர்கள்‌ மே 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.  மறு தேர்வு ஜூலை 2-ம் தேதி நடைபெறுகிறது என பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில்,  9.03 லட்சம் பேர்  இந்த தேர்வு எழுதிய நிலையில் 8,18,743 மாணாக்கர்கள் தேர்ச்சி  பெற்றுள்ளனர்.  அதாவது, மொத்தம் 91.55%  தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும்,  87.69% சிறைவாசிகளும்,   மாற்றுத்திறனாளி மாணவர்கள் 92.45% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி முடிவடைந்தது. 4107 மையங்களில் 9 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியுள்ளனர். இந்தநிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி  காலை வெளியானது. . ரிசல்ட் வெளியிடப்பட்டதும், மாணவர்கள் தங்கள் மதிப்பெண் விபரங்களை அதிகாரப்பூர்வ இணையதளங்களான dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in மூலம் தெரிந்துக் கொள்ள முடியும். இணையதளங்களில் மதிப்பெண் விபரங்களைத் தெரிந்துக் கொள்ள மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி கொண்டு உள்நுழைந்த மதிப்பெண் பட்டியலை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (மே10) காலை 9.30 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.  இதில் மொத்தம் 91.55% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 9.03 லட்சம் பேர்  இந்த தேர்வு எழுதிய நிலையில் 8,18,743 மாணவர்கள் தேர்ச்சி  பெற்றுள்ளனர்.  இவர்களில் மாணவிகள் 94.53 % பேர் தேர்ச்சி பெற்றுள்னர்.  மாணவர்கள் 88.50 % தேர்ச்சி பெற்றுள்ளனர்.  மொத்தம் 91.55% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  260 சிறைவாசிகள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய நிலையில் 228 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது  87.69% தேர்ச்சியாகும். அதுபோல  தேர்வு எழுதிய  மாற்றுத்திறனாளி மாணவர்கள் 92.45% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் .10-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய 13,510 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 12,491 தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி பெற்றவர்கள் – 8,18,743 (91.55%) மாணவியர் – 4,22,591 (94.53 %) தேர்ச்சி மாணவர்கள் – 3,96,152 (88.58%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இந்தாண்டு மாணவர்களை விட மாணவியர் 5.95 % அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாகியுள்ள நிலையில் மொத்தம் 4,105 பள்ளிகள் இந்த தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதில், 1,364 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.எ , அதிகபட்சமாக  97.31% பேர் தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.  சிவகங்கையில் 97.02% மாணவர்கள் தேர்ச்சி பெற்று 2-ம் இடத்தையும், எ  96.36% மாணவர்கள் தேர்ச்சி பெற்று 3-ம் இடத்தை ராமநாதபுரம் மாவட்டம் பிடித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் 96.24 சதவிகிதம் தேர்ச்சியுடன் நான்காம் இடத்தையும் பி.  திருச்சி மாவட்டம் 95.23 சதவிகித தேர்ச்சியுடன் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.

10-ம் வகுப்பு துணைத் தேர்வு எழுத விரும்புபவர்கள் நாளை (மே 11) முதல் விண்ணப்பிக்கலாம். மறு கூட்டல் / மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிக்க விரும்பும்‌ பள்ளி மாணவர்கள்‌ மே 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.  மறு தேர்வு ஜூலை 2-ம் தேதி நடைபெறுகிறது. 

பொதுத்தோ்வில் தோ்ச்சி பெறாத மற்றும் தோ்வுக்கு வராத மாணவா்களைக் கண்டறிந்து சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்த கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி இயக்ககம் இணைந்து ‘தொடா்ந்து கற்போம்’ என்ற திட்டத்தின் கீழ் இந்தப் பயிற்சி வகுப்புகள் மே 13-ஆம் தேதி தொடங்கி, துணைத்தோ்வுகள் நடைபெறும் நாள்கள் வரை மாணவா்கள் படித்த பள்ளிகளிலேயே நடத்தப்பட உள்ளன.

இதில் பங்கேற்கும் மாணவ-மாணவிகளுக்கு பாடவாரியான ஆசிரியா் வல்லுநா்கள் குழு மூலம் தயாரித்த குறைந்தபட்ச கற்றல் கையேடு மற்றும் வினாத்தாள் வழங்கப்பட உள்ளது. தொடா்ந்து மாணவா்களை ஊக்குவித்து துணைத் தோ்வு எழுத அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

எனவே, தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகள் கவலையடையாமல், உடனடியாக பள்ளிகளில் நடக்கும் சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று துணைத்தேர்வெழுதி வரும் கல்வியாண்டிலேயே 11ஆம் வகுப்பில் சேரலாம் அல்லது விரும்பிய உயர்கல்வியில் சேரவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.