சென்னை: தமிழ்நாட்டில், 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்று வெளியாக உள்ளது.

பொதுத் தேர்வு அட்டவணை தீபாவளிக்கு பிறகு வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கெனவே அறிவித்திருந்j நிலையில், இன்று தேர்வு தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,  10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக 3 வகையான தேர்வு அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தவர்,  ஜெஇஇ, நீட் போன்ற தேர்வுகளை கருத்துக்கொண்டு அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும்  கூறினார்.

இந்த  நிலையில் பொதுத் தேர்வு அட்டவணையை அன்பில் மகேஷ்  இன்று  (வியாழக்கிழமை) காலை 9:30 மணிக்கு, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் வெளியிடவுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

மேலும் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் அதனையும் கருத்தில் கொண்டு தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.