சென்னை:
மிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 17ஆம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளுடன் சேர்த்து இன்று வெளியாகிறது.

தேர்வு முடிவுகளை மாணவர்கள் tnresults.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தகவல் மையங்களிலும், அனைத்து நூலகங்களிலும் கட்டணமின்றி அறிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறை வரலாற்றில் ஒரே நாளில் 10,12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஒரே நாளில் வெளியாவது இதுவே முதல்முறையாகும்.