சென்னை:

10, 11, 12-ம் வகுப்பு காலாண்டு தேர்வுகள் அடுத்த மாதம் செப்.12-ம் தேதி தொடக்கும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்து உள்ளது. இதற்கான அட்டவணை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வாயி லாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட் டுள்ளது.

இதன்படி அனைத்து பள்ளிகளும் 10, 12-ம் வகுப்பு களுக்கு காலையிலும், பிளஸ் 1 வகுப்புக்கு மதியமும் தேர்வை நடத்தப்படும்.

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு காலாண்டு தேர்வுகள் விவரம்:

செப்டம்பர் 12-ம் தேதி : மொழிப்பாடம்,

செப்டம்பர் 13-ம் தேதி:  ஆங்கிலம்,

செப்டம்பர் 16-ம் தேதி : கணிதம், விலங்கியல், வணிகவியல், உயிரி வேதியியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை, நர்ஸிங், ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை, விவசாய அறிவியல்,

செப்டம்பர் 17-ம் தேதி :  தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், சிறப்புத் தமிழ், அரசியல் அறிவியல், புள்ளியியல், மனை அறிவியல், நுண்ணுயிரியல்,

செப்டம்பர் 19-ம் தேதி : இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம்,

செப்டம்பர் 21-ம் தேதி : உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம், தொழிற்கல்வி படிப்பு

செப்டம்பர்  23-ம் தேதி : வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல்

10-ம் வகுப்பு காலாண்டு  தேர்வு

செப்டம்பர் 12-ம் தேதி மொழிப்பாடம் முதல் தாள், செப்டம்பர் 13-ம் தேதி மொழிப்பாடம் இரண்டாம் தாள், செப்டம்பர் 16-ம் தேதி ஆங்கிலம் முதல் தாள், செப்டம்பர் 17-ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள், செப்டம்பர் 18-ம் தேதி விருப்ப மொழித் தேர்வு, செப்டம்பர் 19-ம் தேதி கணிதம், செப்டம்பர் 21-ம் தேதி அறிவியல், செப்டம்பர் 23-ம் தேதி சமூக அறிவியல் ஆகிய பாடத் தேர்வுகள் நடைபெறும்.

இவ்வாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.