ஆந்திராவில் மேலும் 10,794 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 5 லட்சத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு

Must read

அமாராவதி: ஆந்திராவில் மேலும் 10,794 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திராவில் கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் இருப்பது போன்று தொடக்கத்தில் காணப்பட்டாலும் கடந்த சில வாரங்களாக பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.

இந் நிலையில் ஆந்திர மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒரே நாளில் மேலும் 10,794 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த பாதிப்புகளுடன் ஆந்திராவில் ஒட்டுமொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 4,98,125 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 70 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,417 ஆக உள்ளது.  99,689 பேர் இன்னமும் கொரோனா சிகிச்சையில் இருக்கின்றனர்.

கொரோனாவில் இருந்து இன்று 11,915 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பி உள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 3,94,019 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர்.

More articles

Latest article