பஞ்சாப்:

வாகா-அட்டாரி எல்லையில் நாட்டின் மிக உயரமான கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் மிக உயரமான  360 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

இந்தியா- பாகிஸ்தான் அட்டாரி வாகா எல்லையில் 107 அடி உயரமுள்ள மூவர்ண தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இதனை மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் கிரண் ரிஜ்ஜூ நேற்று பறக்கவிட்டார்.

இந்திய – பாகிஸ்தான் நாடு களுக்கு இடையிலான முக்கிய மான வழித்தடமான வாகா எல்லையில் உள்ள அட்டாரி பகுதியில் மிகப் பெரிய கொடிக் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் பிரமாண்டமான 107 அடி உயரமுள்ள இந்திய தேசியக் கொடிக்கொடியை ஏற்றும் விழா நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

வாகா எல்லையில் பாது காப்பு நிலவரம் தொடர்பாக பாதுகாப்புப் படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி னேன். எல்லைப் பகுதி வழியாக இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் தொடர்பான பிரச்சினைகள் பற்றி வர்த்தகர்களுடன் விரைவில் பேச்சு நடத்துவேன் என்றார்.

மேலும்,  பாகிஸ்தானில் இருந்து வரும் சரக்குகளை ஆய்வு செய்ய சோதனைச் சாவடியில் “ஸ்கேனர்” நிறுவப்படும்.

காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது கல் எறியும் கும்பலை பாகிஸ்தானில் இருந்து கொண்டு ஒருசிலர் “வாட்ஸ் அப்” குழுக்கள் மூலம் வழி நடத்துகின்றனர். அவர்களை அடையாளம் காணும் பணியில் உளவுத்துறை ஈடுபட்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு விரைவில் முடிவு கட்டப்படும்.

இவ்வாறு கிரண் ரிஜ்ஜூ கூறினார்.