கோராக்பூர்:

டாக்டர் ஒருவரின் அதிவிரைவுடன் செயல்பட்டு தனது சொந்த பணத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி வந்ததால் பல குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த 10ம் தேதி இரவு, 11ம் அதிகாலை நேரத்தில் உ.பி மாநிலம் கோராக்பூர் பிஆர்டி அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவமனையின் 100வது வார்டில் ஆக்சிஜன் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது.

அப்போது குழ ந்தைகள் நல நிபுணரும், துறைத் தலைவருமான கஃபீல் அகமது பல குழந்தைகளை காப்பாற்ற பெரும் சிரத்தை எடுத்தார். எனினும் அவரது கண் எதிரிலேயே 60 குழந்தைகள் தங்களது சுவாசத்தை நிறுத்தியதை கண்டு கண் கலங்கிவிட்டார்.

அதிகாலை 2 மணிக்கு மருத்துவமனையின் மூளையில் ஏற்படும் வீக்கத்திற்கு சிகிச்சை அளிக்கும் பிரிவில் இன்று அகமதுக்கு அழைப்பு வந்துள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் ஆக்சிஜன் விநியோகம் தடைபட் டுவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சையில் உள்ள குழந்தைகளுக்கு ஆக்சிஜன் அவசியம் என்பதை உணர்ந்த அகமது தூக்கத்தில் இரு ந்து எழுந்து தனது நண்பர்களின் மருத்துவமனைக்கு சென்று 3 பெரிய அளவிலான ஆக்சிஜன் சிலிண்ட்களை பெற்று அதை தனது சொந்த காரில் ஏற்றிக் கொண்டு அதிகாலை 3 மணிக்கு மருத்துமவமனைக்கு வந்தார்.

எனினும் இந்த சிலிண்டர்கள் 20 முதல் 30 நிமிடம் வரை மட்டுமே தாக்குபிடிக்க கூடியது. அடுத்த நாள் காலை ஆக்சிஜன் முற்றிலும் தீர்ந்து குழந்தைகள் சுவாசத்திற்கு போராட தொடங்கி ஒன்றன் பின் ஒன்றாக உயிரிழக்க தொடங்கியது. எனினும் சுவாசம் கொடுக்க உதவி சிறு பம்ப் மூலம் தனது அனைத்து ஜூனியர் டாக்டர்களை சுவாசம் கொடுக்க செய்தார்.

தொடர்ந்து ஆக்சிஜன் விநியோகஸ்தரை தொடர்பு கொண்ட போது பணம் செலுத்தாது தெரியவந்தது. இதனால் ஆக்சிஜன் இருப்பு இல்லாமல் போனதும் தெரியவந்தது.

ரொக்கமாக பணம் செலுத்தினால் சிலிண்டர் கொடுப்பதாக ஒரு விற்பனையாளர் கூறியதை தொடர்ந்து, மருத்துவமனை ஊழியர் ஒருவரிடம் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ. 10 ஆயிரத்தை எடுத்து சென்று கொடுக்க செய்தார் அகமது. அது வரை ஜூனியர் மருத்துவர்கள் பம்ப் மூலம் சுவாசம் அளித்து வந்தனர்.

இறுதியில் கண்ணீர் விட்டு கதறிய அகமது கூறுகையில்,‘‘குழந்தைகளின் உயிரை காப்பாற்ற முடியாமல் போய்விட்ட நிலையில் பணம், கல்வி இருந்தும் என்ன பயன். உயிரை காக்க முடியாமல் போன பிறகு பணத்திற்கு அர்த்தமில்லாமல் போய்விடுகிறது. பல குழந்தைகள் என் கண் எதிரிலேயே உயிரிழந்தன. அவர்களை காப்பாற்ற என்னால் எதுவும் செய்ய முடியாமல் போனது’’ என்றார்.

டாக்டர் அகமதுவின் தீவிர செயல்பாடு இல்லை என்றால் மேலும் பல குழந்தைகள் இறந்திருக்கும் என்று மருத்துவமனையில் உள்ள பெற்றோர் பலரும் தெரிவித்தனர். இந்த சிகிச்சை பிரிவில் சுமார் 400 குழ ந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.